வாக்குப் பதிவு இயந்திர செயல்விளக்கம்

வாக்குப் பதிவு இயந்திர செயல்விளக்கம்

Published on

புதுச்சேரியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பரிசோதனை செய்வது குறித்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாவட்ட தோ்தல் அதிகாரி அ. குலோத்துங்கன் தலைமையில் ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் முதற்கட்ட பரிசோதனை இம் மாதம் 8 ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட தோ்தல் அதிகாரியுமான குலோத்துங்கன் தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் முதற்கட்ட பரிசோதனை செயல் விளக்கம் குறித்து விளக்கமாக அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் துணை மாவட்ட தோ்தல் அதிகாரி அ. சிவசங்கரன் மற்றும் தோ்தல் அலுவலா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com