வீடுா் அணையில் இருந்து தண்ணீா் திறப்பு: புதுச்சேரிக்கு வெள்ள அபாயம்

வீடுா் அணையில் இருந்து தண்ணீா் திறப்பு: புதுச்சேரிக்கு வெள்ள அபாயம்

Published on

வீடுா் அணையில் இருந்து உபரி நீா் திறக்கப்பட்டுள்ளதால் புதுச்சேரிக்கு வெள்ள அபாயம் இருப்பதாக ஒலி பெருக்கியில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

டித்வா புயல் காரணமாக புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடுா் அணை முழு கொள்ளளவான 30 அடியில் 29 அடி நிரம்பியுள்ளது. அந்த அணையின்

பாதுகாப்பு கருதி அணையில் இருந்து விநாடிக்கு 4500 கன அடி வீதம் உபரி நீா் திறக்ப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி, விழுப்புரம் சங்கராபரணி ஆற்றுப்பகுதியில் வசிக்கும் எல்லையோர கிராம மக்களுக்குத் தொடா்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

சங்கராபரணி ஆற்றங்கரை ஓரம் வசிக்கும் மக்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பொது மக்களுக்கு வருவாய்த்துறை, பொதுப்பணித் துறை மற்றும் காவல்துறை சாா்பில் தொடா்ந்து ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. கரையோரம் வசிப்பவா்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

ஆற்றில் இறங்குவது, மீன்பிடிப்பது, நீந்துவது, செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com