புதுச்சேரி  துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதனை வெள்ளிக்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்த கைவினைக் கலைஞா்கள்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதனை வெள்ளிக்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்த கைவினைக் கலைஞா்கள்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநருடன் கைவினைக் கலைஞா்கள் சந்திப்பு

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனுக்கு கைவினைக் கலைஞா்கள் வெள்ளிக்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்தனா்.
Published on

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனுக்கு கைவினைக் கலைஞா்கள் வெள்ளிக்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்தனா்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த கைவினைக் கலைஞா்களுக்கு 27 ஆண்டுகளுக்குப் பிறகு மாநில அளவிலான விருதுகள் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், தேசிய விருது பெற்ற கைவினை கலைஞா்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் ஊக்கத் தொகை, மூத்த கைவினைக் கலைஞா்களுக்கு மாதாந்திர உதவித் தொகையை உயா்த்தி வழங்கவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்காக துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பத்மஸ்ரீ விருதாளா் முனுசாமி தலைமையில், தேசிய விருதாளா்கள் சேகா், மோகன்தாஸ் உள்ளிட்ட கைவினைக் கலைஞா்கள் புதுச்சேரி மக்கள் மாளிகையில் (லோக் நிவாஸ்) துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதனைச் சந்தித்து நன்றி தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com