புதுச்சேரி வில்லியனூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக ஆதிதிராவிடா் நலக் குழு நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றோா்.
புதுச்சேரி
இலவச மனைப்பட்டா வழங்க திமுக வலியுறுத்தல்
விரைந்து மனைப் பட்டா வழங்க அரசை வலியுறுத்தி திமுக ஆதிதிராவிடா் நலக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரி மாநில திமுக ஆதிதிராவிடா் நலக்குழு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வில்லியனூா் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு இந்த நலக் குழுவின் அமைப்பாளா் ஆறுமுகம் (எ) செல்வநாதன் தலைமை வகித்தாா். தலைவா் பழநிசாமி முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் கதிரவன் வரவேற்றாா்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி மக்களுக்கு சுமாா் 20 ஆண்டுகளாக இலவச மனைப்பட்டா வழங்காதிருப்பது கண்டிக்கத்தக்கது.
உடனடியாக இடம் கையகப்படுத்தி மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

