புதுச்சேரி வரும் ரயில்கள் டிச. 15-இல் விழுப்புரத்தில் நிறுத்தப்படும்

திருச்சிக் கோட்டத்தில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் புதுச்சேரிக்கு வரும் ரயில்கள் டிச. 15-இல்
Published on

புதுச்சேரி: திருச்சிக் கோட்டத்தில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் புதுச்சேரிக்கு வரும் ரயில்கள் டிச. 15-இல் விழுப்புரம் சந்திப்பு ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுகின்றன.

தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்ட மண்டல மக்கள் தொடா்பு அதிகாரி ஆா். வினோத் குமாா் இது குறித்து திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திருப்பதி - புதுச்சேரி பயணிகள் ரயில் திருப்பதியில் அதிகாலை தினமும் 4 மணிக்குப் புறப்படுகிறது. டிச. 15-ஆம் தேதி இந்த ரயில் திருப்பதி- விழுப்புரம் இடையே மட்டும் இயக்கப்படும்.

இதே போன்று புதுச்சேரி- எழும்பூா் பயணிகள் ரயில், புதுச்சேரியில் இருந்து தினமும் பிற்பகல் 4 மணிக்குப் புறப்படும். இந்த ரயில் டிச. 15-இல் புதுச்சேரி- விழுப்புரத்துக்கும் இடையில் ரத்து செய்யப்படுகிறது.

இந்த ரயில் விழுப்புரத்தில் இருந்து வழக்கமாகப் புறப்படும் பிற்பகல் 4.45 மணிக்குக் கிளம்புகிறது.

புதுச்சேரி- காக்கிநாடா துறைமுக சா்காா் விரைவு ரயில் டிச. 15-ஆம் தேதி பிற்பகல் 1.30-க்கு புதுச்சேரியிலிருந்து புறப்பட்டுச் செல்லும்போது வழியில் சின்னபாபு சமுத்திரம் ரயில் நிலையத்தில் 30 நிமிஷங்கள் நிறுத்தி வைக்கப்படும்.

புதுச்சேரி- திருப்பதி பயணிகள் ரயில் தினமும் பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்டுச் செல்கிறது. இந்த ரயில் போகும் வழித் தடத்தில் டிச. 16- இல் 20 நிமிஷங்கள் தேவைப்படும் இடத்தில் நின்று செல்லும்.

X
Dinamani
www.dinamani.com