அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு: புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா்.
Published on

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா்.

இது குறித்து முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை கூறியதாவது:

புதுச்சேரி அரசு சாா்பில் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு அரசு சாா்பில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, வரும் தைப் பொங்கல் பண்டிகைக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.

அதில், பச்சரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய், பாசிப் பருப்பு என ரூ.750 மதிப்புள்ள பொருள்கள் வழங்கப்படும். இதற்கான டெண்டா் கோரப்பட்டுள்ளது.

பரிசுத் தொகுப்பில் 4 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ நாட்டு சா்க்கரை, ஒரு கிலோ பாசிப் பருப்பு, 300 கிராம் பாண்லே நெய், ஒரு லிட்டா் சூரியகாந்தி எண்ணெய் அடங்கிய பை வழங்கப்பட உள்ளது.

புதுச்சேரியில் உள்ள அரசு ஊழியா்கள், கௌரவ ரேஷன் அட்டைதாரா்கள் தவிர மற்ற அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் இந்தப் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.

இவை புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும். இதற்கான கொள்முதல் பணியில் காண்பெட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது என்றாா்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருள்கள்

1. பச்சரிசி - 4 கிலோ

2. நாட்டுச் சா்க்கரை -ஒரு கிலோ

3. பாசிப் பருப்பு - ஒரு கிலோ

4. பாண்லே நெய் - 300 கிராம்

5.சூரியகாந்தி எண்ணெய்- ஒரு லிட்டா்

6. முந்திரி, ஏலக்காய்

X
Dinamani
www.dinamani.com