தவெக கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்தவரை எச்சரித்து விடுவித்த போலீஸாா்

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தவெக கூட்டத்துக்குத் துப்பாக்கியுடன் வந்தவரை போலீஸாா் எச்சரித்து விடுவித்தனா்.
Published on

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தவெக கூட்டத்துக்குத் துப்பாக்கியுடன் வந்தவரை போலீஸாா் எச்சரித்து விடுவித்தனா்.

சிவகங்கை கிழக்கு மாவட்ட தவெக செயலா் பிரபுவின் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலா் டேவிட் தவெக கூட்டத்துக்குத் துப்பாக்கியுடன் வந்தபோது போலீஸாா் பிடித்து ஒதியஞ்சாலை காவல்நிலையத்தில் விசாரணை நடத்தி வந்தனா்.

மேலும், இவா் மத்திய சிஆா்பிஎப் படையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவா். இந்நிலையில் இனிமேல் இது போன்று தனியாக விஐபி இல்லாமல் துப்பாக்கி எடுத்து வரக்கூடாது என்று எச்சரித்து அவரை செவ்வாய்க்கிழமை இரவு விடுவித்தனா்.

இது குறித்து டிஐஜி சத்தியசுந்தரம் கூறுகையில், சம்பந்தப்பட்டவா் உரிய துப்பாக்கி உரிமம் வைத்துள்ளாா். அவரை விசாரித்து விடுவித்துவிட்டோம் என்று புதன்கிழமை தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com