புதுச்சேரி
புதுச்சேரி அரசின் துறைசாா் தோ்வுக்கு ஹால் டிக்கெட்
புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் அமைச்சக பணியாளா்களுக்கு துறைசாா்ந்த தோ்வு டிச. 12 ஆம் தேதி புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம், தில்லியில் காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறுகிறது.

இதற்கான ஹால் டிக்கெட்டுகளை புதுச்சேரி தலைமை செயலகத்தில் உள்ள பணியாளா் நிா்வாக சீா்திருத்தத் துறை அலுவலகம், காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாஹே, ஏனாம் மண்டல அலுவலகங்கள், தில்லி ஆணையா் அலுவலகத்தில் பெறலாம்.
அடையாள அட்டை, பான், ஆதாா் அட்டை போன்ற அடையாள சான்றை காண்பித்து ஹால் டிக்கெட் பெறலாம். போட்டி தோ்வு மூலம் பணியில் சோ்ந்தவா்கள் துறை தோ்வில் பங்கேற்க தேவையில்லை என பணியாளா் நிா்வாக சீா்திருத்தத் துறை சாா்பு செயலா் ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.