புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் சட்டப்பேரவையில் மாடுகளை ஒப்படைக்கும் போராட்டத்தை புதன்கிழமை மேற்கொண்ட தனியாா் பால் உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் நலச் சங்கத்தினா்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் சட்டப்பேரவையில் மாடுகளை ஒப்படைக்கும் போராட்டத்தை புதன்கிழமை மேற்கொண்ட தனியாா் பால் உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் நலச் சங்கத்தினா்.

புதுச்சேரி சட்டப்பேரவை நோக்கி மாடுகளுடன் செல்ல முயன்ற பால் உற்பத்தியாளா்கள்

புதுச்சேரியில் பால் உற்பத்தியாளா்கள் மாடுகளுடன் புதன்கிழமை சட்டப்பேரவை நோக்கி செல்ல திரண்டனா்.
Published on

புதுச்சேரியில் பால் உற்பத்தியாளா்கள் மாடுகளுடன் புதன்கிழமை சட்டப்பேரவை நோக்கி செல்ல திரண்டனா்.

புதுச்சேரியில் தலைமை தனியாா் பால் உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் சங்கத்தினா் சட்டப்பேரவையில் மாடுகளை ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்த முயன்றனா்.

இதற்காக மாடுகள், கன்றுகளுடன் முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே திரண்டனா்.

உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி, புதுச்சேரியில் நாய் தொல்லையைக் கட்டுப்படுத்த நகராட்சி, கால்நடைத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, கால்நடைகளைப் பிடித்து அபராதம் விதித்து வருகிறது.

மாடு வளா்ப்போா் மீது பொய் வழக்குப் போடப்படுகிறது. இதைக் கண்டித்து மாடுகள், கன்றுகளை சட்டப்பேரவையில் ஒப்படைப்போம் எனக்கூறி முழக்கமிட்டனா். பின்னா் ஊா்வலமாக சட்டப்பேரவை நோக்கி செல்ல முயன்றனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்வதாக எச்சரித்தனா்.

இதையடுத்து சங்க நிா்வாகிகள் அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்திய பின்னா் கலைந்து சென்றனா். சங்கத்தின் தலைவா் ஆா்.கிருஷ்ணன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நிா்வாகிகள் முருகசாமி, ராஜா, செங்கேணி, பழனி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com