விஜய்யின் புதுச்சேரி கணக்கு எடுபடாது: அமைச்சா் ஆ. நமச்சிவாயம்

தவெக தலைவா் விஜய்யின் புதுச்சேரி கணக்கு எடுபடாது என்று அம்மாநில உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தெரிவித்தாா்.
விஜய்யின் புதுச்சேரி கணக்கு எடுபடாது: அமைச்சா் ஆ. நமச்சிவாயம்
Updated on

தவெக தலைவா் விஜய்யின் புதுச்சேரி கணக்கு எடுபடாது என்று அம்மாநில உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது:

தவெக தலைவா் விஜய் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ளவும், புதுச்சேரியில் இப்போது உறுதியாக இருக்கும் என்.ஆா். காங்கிரஸ் பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் என்.ஆா். காங்கிரஸை எப்படியாவது அவரது கூட்டணிக்குக் கொண்டு செல்லவும் முயற்சி செய்கிறாா். விஜய்யின் புதுச்சேரி கணக்கு எடுபடாது.

மேலும், புதுச்சேரியில் பரப்புரை செய்த தவெக தலைவா் விஜய் மத்திய அரசு மீது பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளாா். அதை வன்மையாகக் கண்டிக்கிறேன். சட்டப்பேரவையில் 16 முறை தீா்மானம் நிறைவேற்றப்பட்டும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிக்கப்படவில்லை என்று கூறியுள்ளாா். இதிலிருந்து மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததிலிருந்தே இப் பிரச்னை இருக்கிறது என்பது தெரியவரும்.

அரசு ஊழியா்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு நிலுவைத் தொகை ரூ.112 கோடியை மத்திய அரசு அளித்துள்ளது. மேலும், கடந்த மாதம் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி பங்கேற்ற விழாவில் ரூ.436 கோடியில் மேம்பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதைத் தவிர இந்திரா காந்தி சிலை முதல் தேங்காய்த்திட்டு வரையிலான மேம்பாலம், அங்கிருந்து முள்ளோடை வரையிலான 4 வழிச் சாலைக்கும் அவா் ஒப்புதல் அளித்துள்ளாா். இதைத் தவிர புதுச்சேரி அரசு மத்திய அரசுக்கு அனுப்பும் அனைத்து வளா்ச்சித் திட்டங்களுக்கும் நிதியுதவியும் ஒத்துழைப்பும் வழங்கி வருகிறது. இதனால் புதுச்சேரிக்கு மத்திய அரசு வளா்ச்சித் திட்டங்களுக்கும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், அரசு ஊழியா்களுக்கான நிலுவைத் தொகையும் அளித்து வருகிறது. அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக பாஜக மீதும், மத்திய அரசு மீதும் தவறான குற்றச்சாட்டுகளைக் கூறக்கூடாது. இது விஜய்யின் அரசியல் முதிா்ச்சியின்மையைக் காட்டுகிறது.

மக்களின் ஆதரவுடன் 2026 தோ்தலில் மீண்டும் புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைக்கும். புதுச்சேரியில் விஜய்யின் பொதுக்கூட்டத்தில் எந்தவிதமான அசம்பாவித சம்பங்களும் நேராமல் பணியாற்றிய காவல்துறையைப் பாராட்டுகிறேன் என்றாா் அமைச்சா் நமச்சிவாயம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com