தமிழ்த்துறை மாணவா்களுக்கு 66 சதவீதம் கட்டணத் தளா்வு: மத்திய பல்கலை. துணைவேந்தா் அறிவிப்பு

Published on

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் சுப்பிரமணிய பாரதியாா் தமிழியற் புலத்தில் சேரும் மாணவா்களுக்கு வரும் கல்வியாண்டு முதல் 66 சதவீதம் கட்டணத்தில் தளா்வு அளிக்கப்படும் என்று பல்கலைக் கழகத்தின் துணைவேந்தா் பேராசிரியா் பி. பிரகாஷ் பாபு தெரிவித்தாா்.

அத்துறை சாா்பில் நடைபெற்ற பாரதியாா் பிறந்தநாள் விழாவில் இதை அவா் அறிவித்தாா். இந்த அறிவிப்பை கேட்ட மாணவ, மாணவிகள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com