புதுச்சேரி
பாரதி விழா: மாணவா்களுக்குப் பரிசளிப்பு
பாரதியாா் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பாரதிதாசன் அறக்கட்டளை சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
பாரதிதாசன் அறக்கட்டளையும், பாக்கமுடையான்பட்டு இதயா கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து மகாகவி பாரதியாா் பிறந்த நாள் விழா கருத்தரங்கை புதன்கிழமை நடத்தின.
கல்லூரிக் கலை அரங்கத்தில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழ்த் துறைத் தலைவா் அலமேலு வரவேற்றாா். பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவா் கோ.பாரதி போட்டியில் தோ்வுகளில் வெற்றி பெற்ற 10 மாணவா்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கி ‘புதுச்சேரியில் பாரதியாா்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா்.

