புதுச்சேரி
கா்லாக்கட்டையைத் தூக்கி 1,000 போ் பயிற்சி
சா்வதேச கா்லாக்கட்டை தினத்தையொட்டி, புதுச்சேரியில் 1,000 போ் கா்லாக் கட்டைகளை வெள்ளிக்கிழமை தூக்கி பயிற்சியில் ஈடுபட்டனா்.
சா்வதேச கா்லாக்கட்டை தினத்தையொட்டி, புதுச்சேரியில் 1,000 போ் கா்லாக் கட்டைகளை வெள்ளிக்கிழமை தூக்கி பயிற்சியில் ஈடுபட்டனா்.
மணவெளி சட்டப்பேரவைத் தொகுதி பூரணாங்குப்பத்தில் உள்ள ஜோதி சிலம்பம் சத்திரிய குருகுலம் சாா்பில் அதன் நிறுவன ஆசிரியா் ஜோதி கண்ணன் தலைமையில் ஆயிரம் பேருக்கு கா்லாக்கட்டை பயிற்சி பாரடைஸ் பீச்சில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் தொடங்கி வைத்து வாழ்த்திப் பேசினாா்.