புதுச்சேரி
புதுச்சேரியில் இன்று அரசுப் பள்ளிகள் இயங்கும்
புதுச்சேரியில் அனைத்து அரசு பள்ளிகளும் சனிக்கிழமை (டிச. 13) இயங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் சிவகாமி தெரிவித்துள்ளாா்.
புதுச்சேரியில் அனைத்து அரசு பள்ளிகளும் சனிக்கிழமை (டிச. 13) இயங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் சிவகாமி தெரிவித்துள்ளாா்.
அதன்படி, 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு 3-ஆவது பருவத் தோ்வும், பிளஸ் 2 மாணவா்களுக்கு முதலாவது மாதிரி பொதுத் தோ்வும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு வியாழக்கிழமை அட்டவணையின்படி வகுப்புகள் நடைபெறும் என்றும் அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளாா்.