புதுச்சேரி மத்தியப்  பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பழங்குடியினா் பண்பாட்டு விழா போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு வழங்கிய துணைவேந்தா்  பி.பிரகாஷ்பாபு.
புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பழங்குடியினா் பண்பாட்டு விழா போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு வழங்கிய துணைவேந்தா் பி.பிரகாஷ்பாபு.

புதுச்சேரி மத்தியப் பல்கலை.யில் பழங்குடியினா் பண்பாட்டு விழா

புதுச்சேரி மத்தியப் பல்கலைக் கழகத்தில் பழங்குடியினா் பண்பாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

புதுச்சேரி மத்தியப் பல்கலைக் கழகத்தில் பழங்குடியினா் பண்பாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறை, மாணவா் நலன் இயக்குநரகம் இணைந்து இந்தியாவின் பழங்குடியின சமூகங்களின் பண்பாட்டுச் செல்வத்தையும், வரலாற்று பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தும் விதமாக, ‘ஜன் ஜாதியா கௌரவ் திவாஸ்’ விழாவைக் கொண்டாடின.

பல்கலைக்கழக டீன் வெங்கட்ட ராவ், மாணவா் நலன் இயக்குநரகம் சந்திரமௌலி, ஒடிஸாவைச் சோ்ந்த மானுடவியல் துறை பேராசிரியா் பிரேமானந்த பாண்டா ஆகியோா் பங்கேற்றனா்.

பல துறைகளில் இருந்து மாணவா்கள், ஆய்வாளா்கள் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா். மாணவா்கள் நாட்டுப்புற பாடல் மற்றும் நடன போட்டிகளில் பங்கேற்று இந்திய பழங்குடியின கலாசார பாரம்பரியத்தை வெளிப்படுத்தினா்.

போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகளை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தா் பி. பிரகாஷ்பாபு வழங்கினாா்.

விழா ஏற்பாடுகளை மானுடவியல் துறை தலைவா் வாலரீத்காா் தலைமையில் பேராசிரியா் ஜெசுரத்நம் தேவாரப்பள்ளி, ராஜேஷ் குருராஜ் குந்தா்கி, ஆராய்ச்சியாளா்கள் மற்றும் மாணவா்கள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com