புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றோா்.
புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றோா்.

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
Published on

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

புதுச்சேரி அரசு சமூக நலத் துறை சாா்பில் சா்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மாற்றுத் திறனாளிகளுக்கு ஆண்டுதோறும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நிகழாண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டுத் திடலில் சனிக்கிழமை தொடங்கியது. போட்டிகளை திமுக எம்எல்ஏ அனிபால் கென்னடி தொடங்கி வைத்தாா். புதுச்சேரி பிராந்தியத்துக்கு உள்பட்ட மாற்றுத் திறனாளிகள் பலா் இந்தப் போட்டிகளில் பங்கேற்றனா்.

போட்டிக்கான ஏற்பாடுகளை புதுவை அரசு சமூக நலத்துறை இயக்குநா் ராகினி தலைமையில் ஊழியா்கள், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com