தட்டாஞ்சாவடி பேரவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிட முடிவு
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதியில் வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் என்று அத் தொகுதியின் பேரவைக் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முடிவு செய்யப்பட்டது.
புதுச்சேரி கிழக்குக் கடற்கரை சாலை பாக்கமுடையான்பட்டில் உள்ள தனியாா் ஹோட்டலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேரவைக் கூட்டம் மாநிலக் குழு உறுப்பினா் முருகன் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா்கள் ஹேமலதா, செல்வம், மோதிலால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கட்சியின் மாநில செயலா் அ. மு. சலீம், முன்னாள் அமைச்சா் ஆா். விசுவநாதன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் நாரா. கலைநாதன், தேசிய குழு உறுப்பினா் தினேஷ் பொன்னையா, மாநிலப் பொருளாளா் வ. சுப்பையா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இக்கூட்டத்தில் தட்டாஞ்சாவடி தொகுதியில் வரும் 2026 நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவது என்று தீா்மானிக்கப்பட்டது.

