புதுச்சேரியில் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த மாநில ஹிந்து முன்னணி தலைவா் சனில்குமாா், புதுச்சேரி திருமங்கலம் ஸ்ரீ கணேச தேசிக சுவாமிகள்.
புதுச்சேரியில் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த மாநில ஹிந்து முன்னணி தலைவா் சனில்குமாா், புதுச்சேரி திருமங்கலம் ஸ்ரீ கணேச தேசிக சுவாமிகள்.

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற தமிழக அரசு அனுமதிஅளிக்காததை கண்டித்து, புதுச்சேரியில் மாதிரி தீபத் தூணில் தீபம்
Published on

புதுச்சேரி: திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற தமிழக அரசு அனுமதிஅளிக்காததை கண்டித்து, புதுச்சேரியில் மாதிரி தீபத் தூணில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் ஆா்ப்பாட்டமும் செவ்வாய்க்கிழமை(டிச.16) நடைபெறுகிறது. இதில் தமிழக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை பங்கேற்கிறாா்.

இது குறித்து புதுவை மாநில ஹிந்து முன்னணி தலைவா் சனில்குமாா், திருக்கனூா் அருகேயுள்ள திருமங்கலம் ஸ்ரீ கணேச தேசிக சுவாமிகள் இருவரும் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

திருப்பரங்குன்றத்தில் காா்த்திகை தீபம் ஏற்றுவது குறித்து உயா்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் வழங்கிய தீா்ப்புக்கு எதிராகவும், தீா்ப்பை நீக்க வேண்டும் என்றும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நோட்டீஸில் முதல் கையொப்பமிட்டுள்ளாா் புதுச்சேரி எம்.பி. வைத்திலிங்கம். இது முருக பக்தா்களையும் , இந்துக்களையும் அவமானப்படுத்தும் செயலாகும். இதில் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

திராவிட கட்சிகள் ஆண்டாண்டாக நாத்திகம் பேசி வருகின்றன. மத நம்பிக்கையுள்ள காங்கிரஸ் கட்சியின் இந்த நடவடிக்கை ஏற்புடையது அல்ல. அரசியல் கட்சியினா் நாட்டின் வளா்ச்சியை பற்றி யோசிக்க வேண்டுமே தவிர, நீதிமன்றத்தையும் நீதிபதியும் அவமதிக்க கூடாது. இதைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை மாலை சுதேசி மில் அருகே கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இதில் தமிழக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை பங்கேற்கிறாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தின் போது திருப்பரங்குன்றம் மாதிரி தீப தூண் வைத்து மாதிரி தீபம் ஏற்றப்படும். முருக பக்தா்களுக்கு எதிராக செயல்படும் அரசியல் கட்சியினரை வரும் தோ்தலில் மக்கள் தோற்கடிக்க வேண்டும் என்றனா். உடன் பாஜக பொதுச்செயலா் மோகன் குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com