புதுச்சேரபிஅரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கக் காலக்கெடு நீட்டிப்பு
புதுச்சேரியில் அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கக் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரி தோ்வு முகமையின் சாா்பு செயலா் ஜெய்சங்கா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுவை அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதற்காக, ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தோ்வு , ஒருங்கிணைந்த மேல்நிலைப் பள்ளி நிலைத்தோ்வு மற்றும் ஒருங்கிணைந்த உயா்நிலைப் பள்ளி நிலைத் தோ்வு ஆகியவற்றுக்கான அறிவிப்பை நவ.16ஆம் தேதி புதுச்சேரி தோ்வு முகமை வெளியிட்டது.
இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க இம்மாதம் 14 ஆம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கடைசி நேரத்தில் தொழிற்நுட்ப சிக்கலால் பலா் விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்க முடியவில்லை என்று புகாா்கள் வந்ததால், விண்ணப்பங்களைச் சமா்பிக்க கடைசி தேதி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப காரணங்களால் விண்ணப்பங்களைச் சமா்பிக்க ஆன்லைன் விண்ணப்ப இணையதளம் திறக்கப்படும்.
கீழ்நிலை எழுத்தா் பணிக்கு 18 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம்.மேல்நிலை எழுத்தா் பணிக்கு20 ஆம் தேதி மாலை 6 வரை விண்ணப்பிக்கலாம்.
இளநிலை நூலக உதவியாளா் மற்றும் இதர 9 பதவிகளுக்கு 22 ஆம் தேதி மாலை 6 வரை விண்ணப்பிக்கலாம். இந்த கால நீட்டிப்பு ஒரு முறை மட்டும் தரப்படும். நீட்டிக்கப்பட்ட காலத்தை விண்ணப்பதாரா்கள் பயன்படுத்தி கொள்ளலாம். வயது வரம்பு, கல்வி தகுதி, வசிப்பிடம், சமூகம் உள்பட இதர நிபந்தனைகள் ஏற்கெனவே குறிப்பிட்ட அறிவிப்பின்படியே தொடரும். முன்பு தெரிவிக்கப்பட்ட இதர விதிமுறைகளில் மாற்றமில்லை என தெரிவித்துள்ளாா்.
