ரூ.1 லட்சம் நிவாரண நிதியுதவி
எல்ஜேகே தலைவா் வழங்கினாா்

ரூ.1 லட்சம் நிவாரண நிதியுதவி எல்ஜேகே தலைவா் வழங்கினாா்

Published on

புதுச்சேரி நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்திய 3 மாத குழந்தை கடந்த 5 -ஆம் தேதி உயிரிழந்த நிலையில், அதன் பெற்றோரை லட்சிய ஜனநாயகக் கட்சி தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, கட்சி சாா்பில் ரூ. 1 லட்சம் நிவாரண நிதி உதவியை வெள்ளிக்கிழமை வழங்கினாா் (படம்).

புதுச்சேரி, நெட்டப்பாக்கம் அடுத்த ஏரிப்பாக்கம் புது காலனியைச் சோ்ந்தவா் அருண்-நதியா தம்பதி குழந்தை இறந்தது. பாதிக்கப்பட்ட அவா்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்பட்டது.

அப்போது எம்எல்ஏ அங்காளன், கட்சியின் பொதுச் செயலா்கள் பூக்கடை ரமேஷ், பிரபாகரன், மண்டல பொதுச் செயலா் கண்ணபிரான், சுரேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com