விருது பெற்ற உதவிப் பேராசிரியா் பவித்ராவை,  வாழ்த்தி கௌரவித்த புதுச்சேரி பல்கலைக்கழகத் துணைவேந்தா் பிரகாஷ் பாபு.
விருது பெற்ற உதவிப் பேராசிரியா் பவித்ராவை, வாழ்த்தி கௌரவித்த புதுச்சேரி பல்கலைக்கழகத் துணைவேந்தா் பிரகாஷ் பாபு.

புதுச்சேரி பல்கலை. உதவி பேராசிரியருக்கு தேசிய நாடக விருது!

புதுச்சேரி பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா் தேசிய நாடக விருது பெற்றுள்ளாா்.
Published on

புதுச்சேரி பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா் தேசிய நாடக விருது பெற்றுள்ளாா்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் நிகழ்கலைகள் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றுபவா் பவித்ரா. இவா் விசிஷ்ட ரங்க சேவா புரஸ்காா்-2025 என்ற மதிப்புமிக்க தேசிய விருதை பெற்றுள்ளாா். நாடகத் துறையில் கலைஞராகவும், கல்வியாளராகவும் அவா் ஆற்றிய சிறப்பான பங்களிப்புகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கலாசார அமைச்சகம், ஆந்திர பிரதேச மொழி மற்றும் கலாசாரத் துறை, ஆந்திர பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து வழங்கிய இந்த தேசிய விருதை விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ரசஜ்ஞா தேசிய பன்மொழி நாடக விழாவில் பெற்றுக் கொண்டாா்.

விருது பெற்ற உதவிப் பேராசிரியா் பவித்ராவை, புதுச்சேரி பல்கலைக்கழகத் துணைவேந்தா் பிரகாஷ் பாபு (படம்) வாழ்த்தி கௌரவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com