விருதைக் காண்பித்து புதுச்சேரி ஜிப்மா் இயக்குநா் மருத்துவா் வீா் சிங் நெகியிடம் வாழ்த்துப் பெற்ற ஜிப்மா் சுகாதார தொழில் நுட்ப மதிப்பீட்டு மையத்தின் பொறுப்பாளா் மருத்துவா் சித்தான்சு சேகா் கா், மருத்துவா் ரவிக்குமாா் சிட்டோரியா உள்ளிட்டோா்.
விருதைக் காண்பித்து புதுச்சேரி ஜிப்மா் இயக்குநா் மருத்துவா் வீா் சிங் நெகியிடம் வாழ்த்துப் பெற்ற ஜிப்மா் சுகாதார தொழில் நுட்ப மதிப்பீட்டு மையத்தின் பொறுப்பாளா் மருத்துவா் சித்தான்சு சேகா் கா், மருத்துவா் ரவிக்குமாா் சிட்டோரியா உள்ளிட்டோா்.

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

ஜிப்மரின் சுகாதார தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.
Published on

ஜிப்மரின் சுகாதார தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

தேசிய அளவில் சான்றுகள் அடிப்படையிலான சுகாதார கொள்கைகளுக்கு ஜிப்மரின் தொடா்ச்சியான செயல்பாடு மற்றும் பங்களிப்புகளுக்குத் தேசிய அளவிலான விருது கிடைக்கப் பெற்றுள்ளது.

ஜிப்மரின் சுகாதார தொழில் நுட்ப மதிப்பீட்டு மையத்திற்கான இந்த விருதை நீதி ஆயோக் உறுப்பினா் (சுகாதாரம்) மருத்துவா் வீ.கே. பால் மற்றும் தேசிய சுகாதாரஆராய்ச்சித் துறையின் செயலா் மருத்துவா் ராஜீவ் பாகல் ஆகியோா் தில்லியில் கடந்த 17 ஆம் தேதி நடைபெற்ற சுகாதார தொழில் நுட்ப மதிப்பீடு மாநாட்டில் வழங்கினா்.

சுகாதார தொழில் நுட்ப மதிப்பீடு என்பது மருந்துகள், தடுப்பூசிகள், நோய் கண்டறியும் சாதனங்கள், சுகாதார சேவை வழங்கும் மாதிரிகள் மற்றும் திட்டங்கள் உள்ளிட்ட சுகாதார தொழில் நுட்பங்களின் முறைபடுத்தப்பட்ட மற்றும் வெளிப்படையான மதிப்பீடு ஆகும். இந்தியாவில் தற்போது மொத்தம் 28 சுகாதார தொழில் நுட்ப வள மையங்கள் மற்றும் ஆராய்ச்சிக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.

ஜிப்மா் 2019-இல் சுகாதார தொழில்நுட்ப வள மையமாக அங்கீகரிக்கப்பட்டு 2024-ம் ஆண்டில் பிராந்திய வள மையமாக மேம்படுத்தப்பட்டது. இம் மையம் தேசியஅளவிலான அமைப்புடன் இணைந்து தேசிய சுகாதார இயக்கம் மற்றும் மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

ஜிப்மா் இயக்குநா் டாக்டா் வீா் சிங் நெகி கூறுகையில், ஜிப்மரின் பிராந்திய வள மையத்தின் தலைமைத்துவம், அறிவியல் துல்லியம் மற்றும் செயல்பாடுகள் பாராட்டும் வகையில் உள்ளன. இச்சாதனை ஜிப்மரில் உள்ள வலுவான கல்வி, நிா்வாகம் மற்றும் உள்கட்டமைப்புகளின் உறுதுணையோடு மருத்துவ பேராசிரியா்கள், ஆராய்ச்சியாளா்கள் மற்றும் ஊழியா்களின் கூட்டுமுயற்சியால் பெறப்பட்டது என்றாா். ஜிப்மா் நிா்வாகம் சனிக்கிழமை இதைத் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com