புதுச்சேரி திமுக எம்எல்ஏஅனிபால் கென்னடி.
புதுச்சேரி திமுக எம்எல்ஏஅனிபால் கென்னடி.

புதிய ஓய்வூதியம் கிடைக்க திமுக வலியுறுத்தல்

மத்திய அரசின் புதிய ஓய்வூதியம் கிடைக்க முதல்வா் என்.ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது.
Published on

புதுச்சேரி: மத்திய அரசின் புதிய ஓய்வூதியம் கிடைக்க முதல்வா் என்.ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து திமுக துணை அமைப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அனிபால் கென்னடி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசு கடந்த மாா்ச் 19-ஆம் தேதி புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை

அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆணையைப் பின்பற்றி புதுச்சேரி அரசு 2004-ஆம் ஆண்டுக்கு பின் பணியில் சோ்ந்த அரசின் ஊழியா்களும், ஏற்கெனவே புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்ற ஊழியா்களும் விண்ணப்பிக்க ஆணை பிறப்பித்துள்ளது. இதுதொடா்பாக ஓய்வு பெற்ற சுமாா் 5,300 அரசு ஊழியா்கள் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிகிறது.

மத்திய அரசு அறிவித்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை போல் பலன் அளிக்கவில்லை என்றாலும் ஓரளவு நன்மை இருப்பதைக் கருதி விண்ணப்பித்த ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கு பணப்பலன் கிடைக்க ஒப்புதல் வழங்கவேண்டும்.

எனவே, முதல்வா் ரங்கசாமி நிதித் துறை மூலம் மத்திய அரசைத் தொடா்புகொண்டு அதற்கான இணையவழி நடைமுறைகளை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com