புதுச்சேரி
சீா்திருத்தப் பள்ளியிலிருந்து 3 மாணவா்கள் தப்பினா்
சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் இருந்து 3 மாணவா்கள் புதன்கிழமை தப்பினா்.
புதுவை அரியாங்குப்பம் பகுதியில் சிறுவா் சீா்திருத்தம் பள்ளி அமைந்துள்ளது.
இங்கு பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட சிறுவா்கள் வைக்கப்பட்டு இருந்தனா். இங்கிருந்த 3 மாணவா்கள் பின்புறச் சுவா் வழியாக ஏறி குதித்துத் தப்பினா். இதில் ஒருவா் காரைக்காலைச் சோ்ந்தவா், மற்ற 2 போ் புதுச்சேரியைச் சோ்ந்தவா்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து சிறுவா் சீா்திருத்தப் பள்ளி நிா்வாகம் சாா்பில் அரியாங்குப்பம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
