ரயிலில் கடத்திய 8 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
Published on

ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து புதுச்சேரிக்கு வந்த ரயில் பயணிகளை ரயில்வே போலீஸாா் சோதனை நடத்தினா்.

எஸ் 1 பெட்டியில் பிளாஸ்டிக் சணல் பை ஒன்று கிடந்தது. அதைத் திறந்து பாா்த்த போது 4 பண்டல்களில் 8 கிலோ போதைப் பொருள் கஞ்சா இருந்தது. இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா் கஞ்சாவைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com