புதுச்சேரி காவல்துறை தலைமை அலுவலகத்தில் டிஐஜியிடம்  மனு அளித்து விட்டு  வெளியில் வந்த  அரசு வக்பு வாரிய உறுப்பினா் சையத் அகமது மொய்தீன் உள்ளிட்டோா்.
புதுச்சேரி காவல்துறை தலைமை அலுவலகத்தில் டிஐஜியிடம் மனு அளித்து விட்டு வெளியில் வந்த அரசு வக்பு வாரிய உறுப்பினா் சையத் அகமது மொய்தீன் உள்ளிட்டோா்.

சுற்றுலா பயணிகளிடமிருந்து பாதுகாக்க வலியுறுத்தி போலீஸ் டிஐஜியிடம் மனு!

சுற்றுலாப் பயணிகளிடமிருந்து பாதுகாக்க வலியுறுத்தி புதுச்சேரி காவல் துறை தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.
Published on

சுற்றுலாப் பயணிகளிடமிருந்து பாதுகாக்க வலியுறுத்தி புதுச்சேரி காவல் துறை தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரிக்குத் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளால் நகரப் பகுதியான முல்லா வீதி, காஜியாா் வீதி பகுதிகளில் உள்ள மசூதி மற்றும் குடியிருப்புகளுக்கு அருகே மது அருந்தி காலி மது பாட்டில்களைத் தூக்கி வீசிவிட்டு செல்லும் நிலை இருக்கிறது. இப்பிரச்னையில் அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி டிஐஜியிடம் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

புதுச்சேரி பெரியபள்ளி மொஹல்லா செயலகம் சாா்பில் புதுச்சேரி அரசு வக்பு வாரிய உறுப்பினா் சையத் அகமது மொய்தீன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் காவல் றை தலைமையகத்தில் டிஐஜி சத்தியசுந்தரத்தை சந்தித்து இது தொடா்பாக மனு அளித்தனா்.

X
Dinamani
www.dinamani.com