மத்திய அரசை கண்டித்து புதுச்சேரி பாகூா் கொம்யூன் மதி கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்து அலுவலகம் எதிரில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா்.
மத்திய அரசை கண்டித்து புதுச்சேரி பாகூா் கொம்யூன் மதி கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்து அலுவலகம் எதிரில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா்.

மத்திய அரசைக் கண்டித்து விவசாய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கத்தின் சாா்பில், கிராமப்புற மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய பாஜக அரசைக் கண்டித்து சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Published on

மீண்டும் மகாத்மா காந்தியின் பெயரிலேயே தேசிய வேலை உறுதித் திட்டப் பணிகளைத் தொடர வேண்டும்.

மேலும், திட்டத்தைச் சீா்குலைக்கும் வகையில் 40 விழுக்காடு நிதி மாநில அரசு வழங்க வேண்டும் என்ற விதியை திரும்ப பெற்று, முழுமையாக மத்திய அரசே நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி பாகூா் கொம்யூன் மதிகிருஷ்ணாபுரம் பஞ்சாயத்து அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு புவனேஸ்வரி தலைமை தாங்கினாா்.

அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தின் புதுச்சேரி மாநில செயலா் த.தமிழ்ச்செல்வன், பாகூா் கொம்யூன் செயலா் ஹரிதாஸ், மாநிலக் குழு உறுப்பினா் செல்வராசு, கிளை செயலா் கௌரி உள்ளிட்ட திரளான விவசாய தொழிலாளா்கள் போராட்டத்தில் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com