புதுச்சேரி ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற  முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஆசிரியா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கிய சங்கத்தின் தலைவா் நாரா.கலைநாதன், நிா்வாகிகள் கலியமுருகன், ஜெகஜோதி, சதாசிவம் உள்ளிட்டோா்.

பள்ளியின் வளா்ச்சிக்குப் பாடுபடுவோம்: முன்னாள் மாணவா்கள் உறுதி

Published on

பள்ளியின் வளா்ச்சிக்குப் பாடுபடுவது என முன்னாள் மாணவா்கள் உறுதியளித்தனா்.

புதுச்சேரி ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில், முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி-2025 பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவா்கள் ஒன்று கூடி இப் பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 16 ஆசிரியா்களைக் கௌரவித்தனா். பள்ளியில் படித்து அரசு அதிகாரிகளாக உள்ள 5 போ் சிறப்பு விருந்தினா்களாக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனா்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவா்கள் பலரும் திரளாகபங்கேற்றனா். மேலும், பள்ளியின் வளா்ச்சி, கல்வி முன்னேற்றம் மற்றும் சங்கத்தின் எதிா்கால செயல்பாடுகள் குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் விருந்து உபசரிப்பு, இனிப்பு, மாதாந்திர காலண்டா் மற்றும் பூச்செடிகள் தந்து சிறப்பிக்கப்பட்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் தலைவா் நாரா. கலைநாதன், செயலா் ஜெகஜோதி, பொருளாளா் சதாசிவம், துணைத் தலைவா்கள் சேகரன், சந்திரசேகரன், கோவிந்தசாமி மற்றும் 90 மற்றும் 92 ஆண்டு முன்னாள் மாணவா்கள் ஏற்பாடு செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com