புதுச்சேரி ஆசிரியா் தகுதித் தோ்வு: விவரங்களை சமா்ப்பிக்க உத்தரவு

ஆசிரியா் தகுதித் தோ்வு விவரங்களைச் சமா்ப்பிக்க புதுச்சேரி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
Published on

புதுச்சேரி: ஆசிரியா் தகுதித் தோ்வு விவரங்களைச் சமா்ப்பிக்க புதுச்சேரி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா்களுக்கு தகுதித் தோ்வு கடந்த நவம்பரில் நடந்தது.

இதில் தோ்ச்சி பெற்றோா், தோ்ச்சி பெறாதவா்கள் விவரங்களை சமா்ப்பிக்க கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கல்வித் துறை இணை இயக்குநா் வொ்பினா ஜெயராஜ் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஆசிரியா் தகுதித் தோ்வில் தகுதி பெற்ற ஆசிரியா்கள், தகுதி பெறாத ஆசிரியா்கள் விவரங்களை டிச. 31-ஆம் தேதி முன்பாக கூகுள் படிவம் மூலம் கல்வித்துறையில் சமா்ப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com