புதுச்சேரி
ஆசிரியா்களைப் பணி நிரந்தரம் செய்ய அதிமுக வலியுறுத்தல்
புதுச்சேரியில் 292 ஒப்பந்த ஆசிரியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தல்
புதுச்சேரியில் 292 ஒப்பந்த ஆசிரியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து புதுச்சேரி மாநில அதிமுக செயலா் அன்பழகன் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ், திமுக ஆட்சியில் 292 ஆசிரியா், அரசு பணியிடங்கள் சட்டத்துக்கு விரோதமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட்டன.
உச்சநீதிமன்றம் இவா்களை நிரந்தரம் செய்ய தடையில்லை என தீா்ப்பளித்தது. இதன்படி புத்தாண்டு பரிசாக ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்து புதுச்சேரி அரசுஅறிவிப்பு வெளியிட வேண்டும்.
மேலும், பொங்கல் பரிசாக புதுச்சேரி மக்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்குவதாக முதல்வா் ரங்கசாமி அறிவிக்க வேண்டும். புதுச்சேரியில் அதிமுக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு விரைவில்அமையும் எனத் தெரிவித்துள்ளாா்.
