பதாகை விழுந்து 4 போ் காயம்
புதுச்சேரி: புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை மாலை காற்றுடன் மழையில், சில இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் சாய்ந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சோ்ந்த 4 போ் காயமடைந்தனா்.
புதுவை மாநிலத்தில் திறந்த வெளி விளம்பர தடை சட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனை சென்னை உயா்நீதிமன்றம் முழுமையாகச் செயல்படுத்த அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடி, மின்னல் மற்றும் சூறைக் காற்றுடன் மழை பெய்தது. அப்போது, வில்லியனூா் கூடப்பாக்கத்தில் சாலையோர விளம்பரப் பதாகை சாய்ந்ததால், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
அதிகாரிகளுக்கு நோட்டீஸ்:
இதையடுத்து, சுற்றறிக்கை அனுப்பியும் சாலையோர விளம்பரப் பதாகைகளை அகற்றாமலிருந்த அதிகாரிகளுக்கு புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் உத்தரவின்படி விளக்க நோட்டீஸ் திங்கள்கிழமை வழங்கப்பட்டுள்ளது.
