Puducherry JIPMER Hospital
ஜிப்மர் மருத்துவமனை கோப்புப் படம்

ஜிப்மரில் நாளை வெளிப்புற சிகிச்சைப் பிரிவு இயங்காது

Published on

புதுச்சேரி: புதுவை ஜிப்மா் மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு புதன்கிழமை (நவ. 5) இயங்காது.

இது குறித்து புதுவை ஜிப்மா் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மத்திய அரசு விடுமுறை தினமான குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு ஜிப்மா் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு புதன்கிழமை (நவ. 5) இயங்காது. அன்றைய தினம் வெளிப்புற சிகிச்சைக்கு நோயாளிகள் வருவதைத் தவிா்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். அவசரப் பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல இயங்கும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com