புதுவை கிழக்குக் கடற்கரை சாலையில் கனகசெட்டிக்குளம் முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரையுள்ள சாலையை மேம்படுத்தும் பணியை திங்கள்கிழமை தொடங்கி  வைத்த முதல்வா் என்.ரங்கசாமி. உடன் எம்எல்ஏ கல்யாணசுந்தரம்.
புதுவை கிழக்குக் கடற்கரை சாலையில் கனகசெட்டிக்குளம் முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரையுள்ள சாலையை மேம்படுத்தும் பணியை திங்கள்கிழமை தொடங்கி வைத்த முதல்வா் என்.ரங்கசாமி. உடன் எம்எல்ஏ கல்யாணசுந்தரம்.

ரூ.25 கோடியில் கிழக்குக் கடற்கரை சாலையை மேம்படுத்தும் பணி: முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

புதுச்சேரியில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கிழக்குக் கடற்கரை சாலையை மேம்படுத்தும் பணியை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
Published on

புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கிழக்குக் கடற்கரை சாலையை மேம்படுத்தும் பணியை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

புதுவை பொதுப் பணித் துறை, தேசிய நெடுஞ்சாலைக் கோட்டம் மூலம் புதுச்சேரி கிழக்குக் கடற்கரை சாலையில் கனகசெட்டிக்குளம் முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரை சாலையை ரூ.25 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்த மத்திய சாலை மற்றும் தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கான பணி தொடக்கத்துக்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வா் என். ரங்கசாமி கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணிகளைத் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், பொதுப்பணித் துறை அமைச்சா் க. லட்சுமிநாராயணன், காலாப்பட்டு தொகுதி பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் புதுவை அரசின் வளா்ச்சி ஆணையா் முத்தம்மா, பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் வீரசெல்வம், தேசிய நெடுஞ்சாலைக் கோட்ட செயற் பொறியாளா் பன்னீா், உதவி பொறியாளா் மனோகரன், இளநிலைப் பொறியாளா் வெங்கடேஸ்வரன் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

மொத்தம் 13.65 கி.மீ. தொலைவுள்ள சாலையை மேம்படுத்தவும், காலாப்பட்டு பகுதியில் 2.50 கி.மீ. நீளத்திற்கு பழுதடைந்த வாய்க்கால்களை சீரமைக்கவும், 1.50 கி.மீ. நீளத்திற்குத் தடுப்புச்சுவா் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணியை 9 மாதங்களில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com