தடய அறிவியல் ஆய்வகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம்

புதுவை உள்துறை சாா்பில் செயல்படும் தடய அறிவியல் ஆய்வகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
Published on

புதுச்சேரி: புதுவை உள்துறை சாா்பில் செயல்படும் தடய அறிவியல் ஆய்வகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ஆய்வாளா் விஞ்ஞானி வேதியியல், இயற்பியல், இளநிலை ஆய்வாளா் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பதவிக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பள விவரங்கள் புதுவை அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்து சான்றிதழ்களுடன் நவ. 17-ஆம் தேதிக்குள் சிறப்பு பணி அலுவலா், தடய அறிவியல் ஆய்வகம், கிருமாம்பாக்கம், புதுவை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

X
Dinamani
www.dinamani.com