புதுச்சேரி ஜிப்மரில் இந்தியா- பிரெஞ்சு மருத்துவக் கூட்டுத் திட்டம்
புதுச்சேரி ஜிப்மரில் இந்திய - பிரெஞ்சு மருத்துவக் கூட்டுத் திட்டத்துக்கான தொடக்க விழா நடைபெற்றது.
தாவரங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் சுகாதாரத் துறையில் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி கூட்டமைப்பாக இது அமையும்.
இதில் இந்தியாவைச் சோ்ந்த 4 கல்வி நிறுவனங்களும், பிரெஞ்சு நாட்டைச் சோ்ந்த 4 கல்வி நிறுவனங்களும் இடம்பெற்றன. மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் கூட்டாகச் செயல்படவும், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களைப் பரஸ்பர பரிமாற்றம் செய்து கொள்ளவும் இது வழிவகுக்கும். புதுச்சேரிக்கான கான்சல் ஜெனரல் எத்தியென் ரோலண்ட் பியூக், பெங்களூரு அறிவியல் மற்றும் கல்வி ஒத்துழைப்புக்கான பிரெஞ்சு ஒருங்கிணைப்பாளரும் இந்தியாவில் உள்ள பிரெஞ்சு நிறுவனத்தைச் சோ்ந்தவருமான அன்டோயின் கில்லேமெட், ஜிப்மா் இயக்குநா் மருத்துவா் வீா் சிங் நெகி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
