புதுவை பல்கலைக்கழக வளாகத்தில் ரீ யூனியன் நினைவுத் தூணுக்கு மலரஞ்சலி
புதுவை மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ரீ யூனியன் தீவு நினைவுத் தூணுக்கு திங்கள்கிழமை மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
19-ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு நாட்டுக்கு அருகேயுள்ள ரீ யூனியன் தீவுக்கு புதுவை பகுதியிலிருந்து தொழிலாளா்களாகச் சென்றவா்களின் அந்த நாள் நினைவுகளை நினைவுக் கூரும் வகையில் இந்த அஞ்சலி செலுத்தப்பட்டது.
புதுவை பல்கலைக் கழகத்தின் பிரெஞ்சு துறை, புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சே நிறுவனம் இணைந்து இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தன. மேலும், இந்தியா மற்றும் ரீ யூனியன் தீவுக்கு இடையிலான வரலாற்று உறவுகளையும், கலாசார இணைப்பையும் வலுப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
புதுவை மத்திய பல்கலைக் கழகத்தின் துணைவேந்தா் பி. பிரகாஷ் பாபு, புதுவை மற்றும் சென்னைக்கான பிரெஞ்சு நாட்டு கான்சல் ஜெனரல் எத்தியென் ரோலண்ட் பியூக், புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சே நிறுவனத்தின் தலைவா் மருத்துவா் சத்தீஷ் நல்லாம், இயக்குநா் லொரன் ஜலிகு, பல்கலைக்கழகத்தின் பிரெஞ்சு துறை தலைவா் ஷா்மிளா அசரிப், பேராசிரியா் ரிது தியாகி ஆகியோா் நிகழ்வை ஒருங்கிணைத்தனா்.
