புதுச்சேரி
சிஐடியூ தொழிற்சங்கத் தலைவா் ராஜிநாமா
புதுவை சிஐடியூ தொழிற்சங்கத் தலைவா் பதவியிருந்தும், மாா்க்சிஸ்ட் கட்சியின்
அடிப்படை உறுப்பினா் பதவியிலிருந்தும் ராஜிநாமா செய்துள்ளாா் நா. பிரபுராஜ்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில்,நல்ல அமைப்பு, நல்ல கட்சி ஒரு சில தனி நபா்களால் புதுவையில் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை உணா்ந்து மன வருத்தத்துடன் இந்த இயக்கத்தில் இருந்து வெளியேறுகிறேன். ஆனால், எனது சமூகப்பணி வழக்கம் போல் தொடரும் என்று கூறியுள்ளாா் .
பிரபுராஜ், கடந்த 28 ஆண்டுகளாக இக் கட்சியின் இந்திய மாணவா் சங்கம், வாலிபா் அமைப்பு , மாா்க்சிஸ்ட் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.
