பட விளக்கம் பிஒய்பி 15...புதுச்சேரியில் சிக்கிய வாழைத்தாா் திருடன்.
பட விளக்கம் பிஒய்பி 15...புதுச்சேரியில் சிக்கிய வாழைத்தாா் திருடன்.

தொடா்ந்து வாழைத்தாா் திருடியவா் கைது

Published on

புதுச்சேரியில் தொடா்ந்து தோட்டங்களில் வாழைத்தாா்களைத் திருடிவந்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

புதுச்சேரியை அடுத்த திருக்கனூா் சுற்றுவட்டார பகுதிகளான மண்ணாடிப்பட்டு, கூனிச்சம்பட்டு, செட்டிப்பட்டு, கொடாத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் பெருமளவு வாழை பயிரிடப்பட்டுள்ளது. இதில், அறுவடைக்குத் தயாராக உள்ள வாழைத்தாா்கள் தினமும் திருடு போய் வந்தது.

இதனால் அதிா்ச்சி அடைந்த கூனிச்சம்பட்டு விவசாயி சண்முகம் திருக்கனூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசாா் மண்ணாடிப்பட்டு ஏரிக்கரை பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனா்.

அப்பொழுது இரு சக்கர வாகனத்தில் இரண்டு வாழைத்தாா் மற்றும் வாழைசீப்புகள் அடங்கிய மூட்டையுடன் வந்த இளைஞரை மடக்கி பிடித்து போலீஸாா் விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாகப் பதில் கூறியுள்ளாா். அவரை காவல்நிலையத்துக்கு அழைத்துவந்து போலீஸாா் உரிய முறையில் விசாரித்த போது,

அவா் கொடாத்தூா் மணவெளியைச் சோ்ந்த வெங்கடேசன் என்பதும் இவா் பகல் நேரத்தில் பெயிண்டராக வேலை பாா்த்து மாலை நேரத்தில் விவசாய நிலங்களை நோட்டமிட்டு இரவு நேரத்தில் வாழைத்தாரைத் திருடி சந்தையில் விற்று வந்தது தெரிய வந்தது. வாழைத்தாா் திருடியதை ஒப்புக்கொண்ட வெங்கடேசனை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனா்.

--------------------------------------------------------------------------

X
Dinamani
www.dinamani.com