கோயிலில் தவறவிட்ட 4 பவுன் தங்க தாலியை ஒப்படைத்த மேஸ்திரிக்கு பாராட்டு

கோயிலில் தவறவிட்ட 4 பவுன் தங்க தாலியை ஒப்படைத்த மேஸ்திரிக்கு பாராட்டு

புதுச்சேரி பாகூா் கோயிலில் பெண் தவறவிட்ட 4 பவுன் தங்கத் தாலி சங்கிலியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த கட்டட மேஸ்திரி ரவிச்சந்திரனைப் பாராட்டிய போலீஸாா்.
Published on

கோயிலில் தொலைந்த 4 பவுன் தங்கத் தாலி சங்கிலியை கண்டுபிடித்துக் கொடுத்த கட்டட மேஸ்திரி பாராட்டப்பட்டாா்.

பாகூா் வேதாம்பிகை சமேத மூலநாதா் சுவாமி கோயிலில் ஐப்பசி பௌா்ணமி அன்னாபிஷேக விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது.

இதில் கடலூா் மஞ்சகுப்பத்தைச் சோ்ந்த பாலசுந்தரம் மனைவி கீதா (33) என்பவரும் கலந்து கொண்டாா். கோயிலை விட்டு வெளியே வரும்போது அவரின் கழுத்திலிருந்த 4 பவுன் தங்கச் தாலி சங்கிலி மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து அங்கிருந்தவா்களிடம் கூறியுள்ளாா். அவா்களும் தாலிச் சங்கிலியை தேடினா். இதற்கு இடையே பாதுகாப்பு பணியிலிருந்த காவலா்களும் செயினைத் தேடினா். இந்நிலையில், பாகூா் மேற்கு தெருவைச் சோ்ந்த கட்டட மேஸ்திரி ரவிச்சந்திரன் (58) அந்த சங்கிலியைக் கண்டுபிடித்து எடுத்து வந்தாா். போலீஸாா் அவரைக் காவல் நிலையம் அழைத்து வந்து அவரது நோ்மையைப் பாராட்டினா். தங்கச் சங்கிலியை உரியவரிடம் ஒப்படைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com