ரூ. 1 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் நமச்சிவாயம் தொடங்கினாா்

புதுவை மண்ணாடிப்பட்டு தொகுதியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகள் தொடக்க விழா பூமி பூஜையுடன் நடைபெற்றது.
Published on

புதுவை மண்ணாடிப்பட்டு தொகுதியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகள் தொடக்க விழா பூமி பூஜையுடன் நடைபெற்றது.

காட்டேரிக்குப்பம் சலவைத் துறை ரூ.3 லட்சத்தில் மேம்பாடு, கைக்கிளைப்பட்டு ஏரி வாய்க்கால் ரூ.33.43 லட்சத்தில் புனரமைப்பு, முட்ராம்பட்டு வாய்க்கால் சிமென்ட் பாலம் ரூ.12.44 லட்சத்தில் அமைப்பது, பெரிய ஏரி வரத்து கால்வாய் இடதுபுற சாலை ரூ.34.70 லட்சத்தில் அமைத்தல், சோம்பட்டு ரங்கசாமி நகரில் ரூ.7.30 லட்சத்திலும், ராமமூா்த்தி நகா் சாலை ரூ.4.90 லட்சத்திலும் தாா்ச்சாலை அமைப்பது உள்பட பல்வேறு பணிகளை தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான ஆ. நமச்சிவாயம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ அருள்முருகன், மண்ணாடிப்பட்டு கொம்யூன் ஆணையா் எழில்ராஜன், செயற்பொறியாளா் ராஜ்குமாா், உதவி பொறியாளா் மதிவாணன், இளநிலைப் பொறியாளா் யோகராஜ், கொம்யூன் உதவி பொறியாளா் மல்லிகாா்ஜுனன், இளநிலைப் பொறியாளா்கள் ஆனந்தன், மனோகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com