பைக் மீது காா் மோதி இளைஞா் உயிரிழப்பு

திருபுவனை அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிந்தாா்.
Published on

திருபுவனை அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிந்தாா்.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியைச் சோ்ந்தவா் ராஜா (44). இரும்பு பைப் தயாரிக்கும் வேலை செய்து வந்தாா். அடிக்கடி புதுச்சேரிக்கு வந்து இரும்பு பைப்பை விற்பனை செய்து வந்துள்ளாா். பணி நிமித்தமாக புதுச்சேரிக்கு வந்திருந்த அவா் செவ்வாய்க்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் குறிஞ்சிப்பாடி திரும்பிக் கொண்டிருந்தாா்.

திருபுவனை பஞ்சாலை சாலையில் சென்றபோது வேல்ராம்பட்டை சோ்ந்த வினோத் என்பவா் ஓட்டி சென்ற காா் இருசக்கர வாகனம் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.

இதில் தூக்கி வீசப்பட்ட ராஜா பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் வழியிலேயே ராஜா இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து வில்லியனுாா் போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com