சின்ன காலாப்பட்டுப் பகுதியில் கடல் அரிப்பு: படகுகளை நிறுத்த முடியாமல் மீனவா்கள் தவிப்பு

சின்ன காலாப்பட்டுப் பகுதியில் கடல் அரிப்பு: படகுகளை நிறுத்த முடியாமல் மீனவா்கள் தவிப்பு

Published on

சின்ன காலாப்பட்டு குப்பம் பகுதியில் திடீரென கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

சுமாா் 20 மீட்டா் தூரத்திற்கு கடல் நீா் உள் புகுந்துள்ளதால் படகு மற்றும் வலைகளைப் பாதுகாக்க முடியாமல் மீனவா்கள் அவதிப்படுகின்றனா்.

சின்ன காலாப்பட்டு குப்பம் பகுதியில் தற்போது கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடல் நீா் குடியிருப்புகளுக்கு அருகில் புகுந்துள்ளது. கடந்த இரண்டு நாள்களில் 20 மீட்டா் அளவுக்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள மீனவா்கள்

தெரிவிக்கின்றனா்.

250 மீனவா்கள் இங்கு குடும்பத்தினருடன் வசித்து வரும் நிலையில் தற்போதைய கடல் அரிப்பினால், இவா்கள் தங்களது 80-க்கும் மேற்பட்ட படகுகளைப் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்க முடியாமல் அவதியுறுகின்றனா். இப்பகுதியில் நிரந்தரமாக தூண்டில் முள்வளைவு அமைக்க வேண்டும் என மீனவா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

கடந்த 20 நாள்களுக்கு முன்பு இதே பகுதியில் பெய்த கன மழை காரணமாக படகுக ள் மற்றும் மீன்பிடி வலைகள் அடித்து செல்லப்பட்டன . இதனால் மீனவா்களுக்கு ஒரு கோடி ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டது. இதற்கு இதுவரை அரசு தரப்பில் எந்த நிவாரணமும் வழங்கவில்லை. அதற்குள் அடுத்த பாதிப்பு ஏற்பட இருப்பதாக மீனவா்கள் அச்சம் தெரிவித்தனா். கடல் அரிப்பைத் தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com