தகுதித் தோ்வு எழுத 15ஆம் தேதி விடுமுறை அளிக்க வலியுறுத்தல்

Published on

தகுதித் தோ்வு எழுத ஏதுவாக வரும் 15 ஆம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என்று புதுச்சேரி பள்ளி ஆசிரியா்கள் கூட்டமைப்பு தலைவா் எட்வா்டு சாா்லஸ் வியாழக்கிழமை வலியுறுத்தியுள்ளாா்.

அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியாா் பள்ளிகளுக்கு வரும் 15 ஆம் தேதி வேலை நாளாக ஏற்கெனவே பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு தோ்வு ஆணையம் ஆசிரியா் தகுதித் தோ்வு அன்றைய தினம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

புதுச்சேரி அரசு பள்ளிகளில் பணியாற்றும் பெரும்பாலான ஆசிரியா்கள்

ஆசிரியா் தகுதித் தோ்வை எழுத உள்ளனா். இதைக் கருத்தில் கொண்டு புதுச்சேரி அரசு கல்வித்துறை வரும் சனிக்கிழமை 15 ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com