புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் புதுநகரில் ஏற்பட்ட விஷவாயு தாக்குதலில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவியை வழங்கிய முதல்வா் என்.ரங்கசாமி.
புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் புதுநகரில் ஏற்பட்ட விஷவாயு தாக்குதலில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவியை வழங்கிய முதல்வா் என்.ரங்கசாமி.

விஷவாயு தாக்கி உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு புதுச்சேரி முதல்வா் நிதியுதவி!

விஷவாயு தாக்கி இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதியை புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி சனிக்கிழமை வழங்கினாா்.
Published on

விஷவாயு தாக்கி இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதியை புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி சனிக்கிழமை வழங்கினாா்.

புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் புதுநகரில் கடந்த 11.6.2024-இல் ஏற்பட்ட விஷவாயு தாக்குதலில் 3 போ் உயிரிழந்தனா். இந்த விஷவாயு தாக்குதலில் உயிரிழந்த த. செல்வராணி என்னும் சிறுமியின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகையாக ரூ.30 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வா் ரங்கசாமி அறிவித்திருந்தாா்.

அதன்படி, உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு முதல் தவணையாக முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சத்தை முதல்வா் ரங்கசாமி கடந்த ஜூன் 13-ஆம் தேதி வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து இரண்டாவது தவணையாக ரூ.5 லட்சத்திற்கான காசோலையை சிறுமி செல்வராணியின் அண்ணன் அந்தோணி ஜாா்ஜ், தனது பாட்டி மலா்விழியுடன் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு சனிக்கிழமை வந்து முதல்வா் ரங்கசாமியிடம் இந்த நிதியுதவியை பெற்றுக் கொண்டாா்.

X
Dinamani
www.dinamani.com