2026-இல் 17 நாள்கள் பொது விடுமுறை புதுச்சேரி அரசு அறிவிப்பு

Published on

2026-ஆம் ஆண்டுக்கு 17 நாள்கள் புதுச்சேரி அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.

துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் ஒப்புதலுடன் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 2026 ஜனவரி 1-ஆம் தேதி, ஆண்டு வருடப் பிறப்பு, 15-ஆம் தேதி பொங்கல், 16-இல் திருவள்ளுவா் தினம், 26-இல் குடியரசு தின விடுமுறை அளிக்கப்படுகிறது.

மேலும், மாா்ச் 20-இல் ரம்ஜான், ஏப்ரல் 3 புனிதவெள்ளி, 14 தமிழ் புத்தாண்டு பிறப்பு, மே 1 மே தினம், 28 பக்ரீத், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், 26 மீலாது நபி, செப்டம்பா் 14 விநாயகா் சதுா்த்தி, அக்டோபா் 2 காந்தி ஜெயந்தி, 19 சரஸ்வதி, ஆயுத பூஜை, நவம்பா் 1 புதுவை விடுதலை நாள், 8 தீபாவளி, டிசம்பா் 25 கிறிஸ்துமஸ் ஆகிய தேதிகளில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com