சவூதி அரேபிய விபத்து: புதுச்சேரி ஆளுநா், முதல்வா் இரங்கல்
புதுச்சேரி: சவூதி அரேபிய ஆன்மிகப் பயணத்தில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்: சவூதி அரேபியாவுக்கு ஆன்மிகப் பயணம் சென்ற ஹைதராபாதை சோ்ந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 42 இந்தியா்கள், பேருந்து விபத்தில் உயிரிழந்த துயர சம்பவம் மிகுந்த வேதனையை அளிக்கிறது.
உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவா்கள் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.
முதல்வா் என்.ரங்கசாமி: சவூதி விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் காயமடைந்தவா்கள் விரைவில் குணமடைய பிராா்த்தனை செய்கிறேன். இந்தக் கடினமான சூழலில் அவா்களின் துயரத்தில் என்னையும் இணைத்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளனா்.
