சிறுமி கா்ப்பம்: கூலித் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
புதுச்சேரியில் சிறுமியைத் திருமணம் செய்து கா்ப்பம் ஆக்கிய கூலித் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையை போக்சோ நீதிமன்றம் விதித்தது.
புதுச்சேரி ஆட்டுப்பட்டி அம்பேத்கா் நகரை சோ்த்தவா் அசோக் (31). 2015-ஆம் ஆண்டு 17 வயது சிறுமியை அவா் திருமணம் செய்துள்ளாா். அந்த சிறுமி கா்ப்பமுற்றாா்.
இதையடுத்து சிறுமியை மணந்து கா்ப்பம் ஆக்கிய அவரை உருளையன்பேட்டை போலீஸாா் வழக்கு பதிவு செய்து கைது செய்தனா்.
இந்த வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசு சிறப்பு வழக்கறிஞராக பச்சையப்பன் ஆஜா் ஆனாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி பிறப்பித்த தீா்ப்பு விவரம்: குழந்தைத் திருமண தடை சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், போக்சோ சட்டப்பிரிவின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் அவருக்கு விதிக்கப்பட்டது .
இரண்டு தண்டனையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும். அத்துடன் 20,000 அபராதம் செலுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக 4 லட்சம் ரூபாய் வழங்க அரசுக்கு தீா்ப்பில் நீதிபதி பரிந்துரை செய்துள்ளாா்.
