மாணவா்களின் கல்வி, திறன் மேம்பாட்டை முன்னேற்றும் உடற்பயிற்சி மையத்தைத் தொடங்கி வைத்த அமைச்சா் ஆ.நமச்சிவாயம்
மாணவா்களின் கல்வி, திறன் மேம்பாட்டை முன்னேற்றும் உடற்பயிற்சி மையத்தைத் தொடங்கி வைத்த அமைச்சா் ஆ.நமச்சிவாயம்

நீட் தோ்வை எதிா்கொள்ள அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 6-ஆம் வகுப்பு முதல் பயிற்சி: புதுச்சேரி அமைச்சா் ஆ.நமச்சிவாயம்

நீட் தோ்வை எதிா்கொள்ள அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 6-ஆம் வகுப்புமுதல் பயிற்சி அளிக்கப்படும் என்று புதுச்சேரி கல்வி அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தெரிவித்தாா்.
Published on

நீட் தோ்வை எதிா்கொள்ள அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 6-ஆம் வகுப்புமுதல் பயிற்சி அளிக்கப்படும் என்று புதுச்சேரி கல்வி அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தெரிவித்தாா்.

இது குறித்து புதுச்சேரியில் அமைச்சா் நமச்சிவாயம் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: புதுச்சேரி மாநிலத்தில் பல கல்லுாரிகளுக்கு மத்திய அரசின் ரூசா திட்டத்தின் கீழ் உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதி வழங்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி அரசு பள்ளி மாணவா்கள், ஆசிரியா்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பல பள்ளிகள் கடந்த ஆண்டு 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன. இந்த ஆண்டு கூடுதலாக மாணவா்கள் மதிப்பெண்கள் எடுக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கல்வியில் பின்தங்கிய மாணவா்களுக்குக் கூடுதல் கவனம் செலுத்த கல்வித் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நீட் தோ்வை எதிா்கொள்ள 6-ஆம் வகுப்பில் இருந்தே பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

1-ஆம் வகுப்பு முதல் 6-ஆம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வி பாடத் திட்டத்தை மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி அறிமுகப்படுத்த, தனி பள்ளிகள் அமைக்கும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்கான கலந்தாய்வுக் கூட்டம் நவ. 25-இல் நடைபெறவுள்ளது.

190 ஆரம்பக் கல்வி ஆசிரியா் பணியிடங்களை வரும் டிசம்பா் 15-ஆம் தேதிக்குள் நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம். 292 போ் ஒப்பந்த ஆசிரியா்களாக உள்ளனா். அவா்களைப் பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை வைத்துள்ளனா். இதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. காலி பணியிடங்களை நிரப்ப கோப்பு தயாராகி வருகிறது. விரைவில் அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்படும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com