புதுச்சேரி கடலோர பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கும் வகையிலும், தீவிரவாத ஊடுருவலைத் தடுக்கும் வகையில் சாகர் கவாச் ஒத்திகை நடைபெற்றது.
இந்தியாவில் 2008 ல் கடல் வழியாக மும்பையில் நுழைந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பொது மக்கள், போலீஸார் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக கடலோர பாதுகாப்பைப் பலப்படுத்தும்விதமாக 'சாகர் கவாச் 'என்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி வருடத்திற்கு 2 முறை நடத்தப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி கடலோர காவல் படை சார்பில் காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் தலைமையில், காவல்துறை கண்காணிப்பாளர்கள் காவல் ஆய்வாளர்கள் புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் இன்று கடலோரப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இன்றும் நாளையும் நடைபெறும் இந்த ஒத்திகை நிகழ்வில் 500 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேங்காய்திட்டு துறைமுகப் பகுதிகள் , வீராம்பட்டினம், பனித்திட்டு, காலாப்பட்டு வரை உள்ள மீனவ கிராம கடலோர பகுதிகள் மற்றும் முகத்துவார பகுதிகளில் படகுமூலம் ஆய்வு மேற்கொண்டனர்.

இதையும் படிக்க: நெல் ஈரப்பதம் அதிகரிப்பு கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.