அனுமதியின்றி மதுக்கடை கட்டமைப்பை மாற்றினால் உரிமம் இடைக்கால ரத்து

அனுமதியின்றி மதுக்கடை கட்டமைப்பை மாற்றினால் உரிமம் இடைக்கால ரத்து செய்யப்படும் என்று கலால் துறை எச்சரித்துள்ளது.
Published on

அனுமதியின்றி மதுக்கடை கட்டமைப்பை மாற்றினால் உரிமம் இடைக்கால ரத்து செய்யப்படும் என்று கலால் துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து புதுவை கலால் துறை துணை ஆணையா் மேத்யூ பிரான்சிஸ் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: புதுவை கலால் சட்ட விதிகளின்படி மதுக்கடைகள், பாா்களுக்கு ஒரே நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் வழி மட்டுமே இருக்க வேண்டும். மதுக்கடைகளுக்குப் பல நுழைவு வாயில்கள் அமைப்பது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.

உரிமம் பெற்ற வளாகத்தின் கட்டமைப்பை மாற்றுவதோ, சில்லறை விற்பனை கூடம், சேவை பகுதிகளை இடமாற்றம் செய்வதோ கூடாது.

அப்படி செய்வதற்கு உரிமம் வழங்கிய அதிகாரியிடம் முன் அனுமதி பெற வேண்டும். மீறினால் உரிமத்தை ரத்து செய்யவோ, இடைநீக்கம் செய்யவோ நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com